செய்திகள்

கொழும்பில் நிர்க்கதியாகியுள்ள மலையக இளைஞர்களை வீடுகளுக்கு அழைத்து செல்ல வேலைத்திட்டம்

ஊரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதை தொடர்ந்து கொழும்பு உள்ளிட்ட நகர் பகுதிகளிலிருந்து வீடுகளுக்கு செல்ல முடியாது நிர்க்கதியாகியுள்ள மலையக இளைஞர் , யுவதிகளை வீடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக இன்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இது தொடர்பாக யோசனைகளை முன்வைத்துள்ள நிலையில் அதற்கு அமைச்சரவையின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 20ஆம் திகதிமுதல் திடீரென ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதால் இவர்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. தமது வீடுகளுக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்துதருமாறு மலையக இளைஞர்கள் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துவந்த நிலையில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் விசேட தொலைபேசி இலக்கங்களை அறிவித்திருந்தார்.
அந்த தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்புக்களை ஏற்படுத்திய எமது இளைஞர்கள் கொழும்பில் நிர்க்கதியாகியுள்ளதாக தெரிவித்தனர். அதன் அடிப்படையிலேயே அமைச்சரவையின் அனுமதியுடன் ;அவர்கள் தமது வீடுகளுக்குத் திரும்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் வீடுகளுக்குச் செல்பவர்களுக்கு தங்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும். இன்னும் ஓரிரு தினங்களில் இராணுவத்தினின் உதவியுடன் மலையக இளைஞர்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. -(3)