செய்திகள்

கொழும்பில் பண்டாரநாயக்க மாவத்தை தனிமைப்படுத்தப்பட்டது

கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தை பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த பிரதேசத்தை சேர்ந்த  பெண்ணொருவருக்கு நேற்றிரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்தே அந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் மையத்துக்கு வெளியே நீண்ட நாட்களின் பின்னர் நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. -(3)