செய்திகள்

கொழும்பில் பல இடங்களில் மின் தடை

கொழும்பில் பல பிரதேசங்களில் இன்று பிற்பகல் 4 மணி முதல் திடீர் மின் தடையேற்பாட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டிய , கொம்பனித்தெரு மற்றும் கோட்டை உள்ளிட்ட பிரதேசங்களில் இந்த மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொலன்னாவ பகுதியில் அமைந்துள்ள உப மின் இணைப்பு நிலையத்திலிருந்து விநியோகிக்கப்படும் நிலத்தடி மின் கட்டமைப்பில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாகவே இந்த மின் தடை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த கோளாரை சரி செய்யும் வரை வேறு வழியில் மின்சாரத்தை விநியோகிக்கும் முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக மின்சார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.