செய்திகள்

கொழும்பில் பெட்டிகளுக்குள் மறைத்துவைக்கப்பட்டடிருந்த பெருமளவு பணம் மீட்பு

கொழும்பு மிரிஹானாவில் அமைந்துள்ள கட்டதொகுதியொன்றில் நேற்றிரவு பொலிஸார் திடீர் சோதனையொன்றை மேற்கொண்டனர்.
குறிப்பிட்ட கட்டிடத்திற்குள் பல பெட்டிகளில் வைத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதை தொடர்ந்தே தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்றதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் பல பெட்டிகளை பொலிஸார் வாகனமொன்றில் ஏற்றிபொலிஸ் நிலையம் கொண்டுசென்றதை அவதானிக்க முடிந்தது.
குறிப்பிட்ட கட்டிடம் முன்னைய அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர் ஒருவரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததாக கருதப்படுகின்றது.
பொதுமக்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே இந்த தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றதாக தெரிவித்துள்ள ஐக்கிய தேசியகட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன்ராமநாயக்க பெறுமதியான பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.