செய்திகள்

கொழும்பில் மீட்கப்படும் சடலங்கள் சி.ஐ.டி.யினர் தீவிர விசாரணை

கொழும்பில் பல்வேறு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ள மனித உடற்பாகங்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோனின் உத்தரவிற்கிணங்க குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை முதல் விசாரணை குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

கண்டெடுக்கப்பட்டுள்ள சடலங்கள் மற்றும் உடற்பாகங்களை அடையாளம் காணும் பொருட்டு மரபணு பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான நீதிமன்ற அனுமதியை பொலிஸார் பெற்றுள்ளனர்.

அத்துடன், கண்டெடுக்கப்பட்ட உடற்பாகங்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்கள் பொலிஸ் தலைமையகத்திற்கு அல்லது பொலிஸ் நிலையங்களில் தகவல்களை வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.