செய்திகள்

கொழும்பில் வசிப்போரின் தகவல்கள் திரட்டல்!

கொழும்பு நகரில் வசிப்போரின் தகவல்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று (14) முதல் 03 நாட்களுக்கு விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

இதற்காக பொதுமக்களுக்கு விசேட படிவமொன்று வழங்கப்படுமெனவும் அதனை பூர்த்தி செய்து பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இந்த படிவத்தை பொலிஸ் நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியுமென அவர் கூறினார்.

“தேசிய பாதுகாப்பை பாதுகாப்போம் – குற்றங்கள் மற்றும் போதைப்பொருளை ஒழிப்போம்” எனும் தொனிப்பொருளில் இன்று முதல் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

வீடுகளிலும் வர்த்தக நிலையங்களிலும் ஏனைய அனைத்து இடங்களிலும் உள்ளவர்களின் தகவல்களை திரட்டும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறினார்.

-(3)