செய்திகள்

கொழும்பில் வீதியொரத்தில் கிடந்த பொதியொன்றில் இருந்து சடலம் மீட்பு!

கொழும்பில் டேம் வீதி பகுதியில் வீதியோரத்தில் பயணப் பொதியொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய வீதியோரத்தில் கிடந்த பொதியொன்றை சோதனையிட்ட போது அதற்குள் இருந்து சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாரோ கொலை செய்த பின்னர் பொதிக்குள் போட்டு குறித்த இடத்தில் வீசிவிட்டு சென்றிருக்கலாம் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் இது தொடர்பாக விசாரணைகளை நடத்த வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். -(3)