செய்திகள்

கொழும்பில் 100 பேர் தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கு

ஜா-எல சுதுவெல்ல பகுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணிய கொழும்பை சேர்ந்த 100 பேர் வரையிலானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குணசிங்கபுர , கிரேன்ட்பாஸ் உள்ளிட்ட பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இன்றைய தினத்தில் குறித்த பிரதேசத்தில் விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர் 100 பேர் வரையிலானோரை தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். -(3)