செய்திகள்

கொழும்புக்கு விசேட பாதுகாப்பு திட்டம்: பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகன

தற்போது தேர்தல் வாக்களிப்பு முடிவடைந்திருக்கின்ற நிலையில் கொழும்புக்கு விசேட பாதுகாப்பு திட்டம் ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகன இன்று மாலை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.

இதுவரை 405 தேர்தல் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் இதில் 100 சட்டவிரோதமானவை என்றும் 305 தாக்குதல் மற்றும் வன்முறைகளுடன் தொடர்பு பட்டவை என்றும் தெரிவித்த அவர், 2005 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இது 50 சத வீதத்தினால் குறைவானது என்றும் கூறினார்.

70,500 பொலிசார் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் தற்போது தேர்தல் முடிவடைந்திருக்கின்ற நிலையில் அவர்கள் நாட்டின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுவர் என்றும் அவர் கூறினார்.