செய்திகள்

கொழும்பு அரசியலில் திடீர் திருப்பம்: கட்சித் தலைமையை மைத்திரியிடம் ஒப்படைக்கிறார் மகிந்த

கொழும்பு அரசியலில் ஒரு திடீர்த்திருப்பமாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை மைத்திரிபால சிறிசேனாவுக்கு விட்டுக்கொடுக்க மகிந்த ராஜபக்‌ஷ முன்வந்திருக்கின்றார். சிறிலங்கா சுதந்திரக்கட்சி வட்டாரங்கள் இத்தகவலை இன்று காலை உறுதிப்படுத்தின.

நேற்றிரவு நடைபெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். எனினும் விமல்வீரவன்ச மற்றும் உதய கம்மன்வில போன்றவர்கள் அதனை எதிர்த்துள்ளனர்.

இன்று மாலை சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் கூட்டத்தில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்படும். அதனையடுத்து மகிந்த ராஜபக்‌ஷ புதிய தலைவர் மைத்திரிபாலவை சந்திப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.