செய்திகள்

கொழும்பு , கம்பஹா , களுத்துறையில் பொது போக்குவரத்து இயங்காது

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் கொழும்பு , கம்பஹா , களுத்துறை மாவட்டங்களில் பஸ்கள் மற்றும் ரயில்கள் சேவையில் ஈடுபடாது என போக்குவரத்து அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த மாவட்டங்களில் 22ஆம் திகதி வரையில் போக்குவரத்து சேவைகள் ஈடுபடாது எனவும் அத்துடன் மாகாணங்களுக்கு இடையிலான பஸ்களும் சேவையில் ஈடுபடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் பொது போக்குவரத்தில் பயணிப்பவர்களுக்காக விசேட டோக்கன் கார்ட் ஒன்றை விநியோகிக்க நடவடிக்கையெடுக்கவுள்ளதாகவும் அத்தியாவசிய தேவை அல்லாது வேறு தேவைகளுக்கு யாருக்கும் அவற்றில் பயணிக்க முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)