செய்திகள்

கொழும்பு துறைமுகம் இந்தியாவிற்குரியதா? சீனாவின் புதிய தூதுவர் கேள்வி

கொழும்பு துறைமுகம் இந்தியாவிற்குரியதா அல்லது இலங்கைக்குரியதா என இலங்கைக்கான சீனாவின் புதிய தூதுவர் ஜி சியான்லயாங் கேள்வி எழுப்பியுள்;ளார்
கொழும்பில் உள்ள தூதரகத்தில் செய்தியாளர்களை சந்தித்தவேளை அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்
கடந்த வருடம் இலங்கை துறைமுகத்திற்கு சீனா நீர்மூழ்கிகள் வந்தவேளை பலரும் அதனை பெரிதுபடுத்தி கூச்சலிட்டதை கண்டு தான் அதிர்ச்சியடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சீனா நீர்மூழ்கிகள் இலங்கைக்கு வரும் வேளைகளில் மாத்திரம் அது பெரிதுபடுத்தப்படுகி;ன்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீhமூழ்கிகள் குறித்து இந்தியா கரிசனை வெளியிட்டிருந்தால் நான் அது குறித்து இங்குள்ள எனது இந்திய நண்பருடன் ஆராய்வேன்,இது அரசியல் அல்லது தந்திரோபாய காரணங்களுக்காக அல்ல மாறாக தொழில்நுட்ப காரணங்களுக்காக,
கொழும்பு துறைமுகம் ஒரு வர்த்தக துறைமுகம்,அமெரிக்கா,இந்தியா , சீனா உட்பட பல நாடுகள் அதனை பயன்படுத்துகின்றன . அதனால் சீனாவின் நீர்மூழ்கிகளுக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததன் அர்த்தம் எனக்கு புரியவில்லை,
இலங்கை துறைமுகத்தை வேறு எந்த நாடாவது இராணுவ தளமாக பயன்படுத்த முடியுமா?
கொழும்பு துறைமுகம் இந்தியாவிற்குரியதா அல்லது இலங்கைக்குரியதா என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.