செய்திகள்

கொழும்பு துறைமுக நகர் நிர்மாணப் பணிகள் இடை நிறுத்தம்: சீன தூதுவர் அதிருப்தி

கொழும்பு துறைமுக நகர் நிர்மாணப் பணிகள் இடை நிறுத்தப்பட்டமை விடயத்தில் சீனா தொடர்ந்து அதிருப்தியுடன் இருக்கின்றது. எனினும் இலங்கையின் நம்பகமான அபிவிருத்தி பங்காளராக சீனா தொடர்ந்தும் காணப்படும். வடக்கு கிழக்கு உட்பட நாட்டில் முக்கிய பிறதேசங்களில் தொழில்துறை வளையங்கள் கைத்தொழில் பேட்டைகளை அமைக்க நாம் இலங்கைக்கு பூரண ஒத்தழைப்பினை வழங்குவோம் வழங்குவோம.;’

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் இலங்கைக்கான புதிய சீனா தூதுவர் யே சியாம்லைங் நேற்று (18) காலை ஏற்றுமதி அபிவிருத்தி சபையில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனை சந்தித்தபோதே இதனை கூறினார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்: இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு சீனா தன்னாலான உதவிகளைத் தொடர்ந்தும் வழங்கிவரும். கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் துறைமுக நகரம் உட்பட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களில் சீனா முதலீடு செய்துள்ளது. துறைமுக நகரம் அமைக்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருப்பதாகவும், சூழல் தொடர்பான ஆய்வு முன்னெடுக்கப்படுவதாகவும் இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது. அதேநேரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீன விஜயம் ,ரு நாட்டுக்கும் ,டையிலான உறவுகளைப் பலப்படுத்தும் என நான் எதிர்பார்கின்றேன்.

இலங்கை ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன , பிரதமர் ரணில் விக்கிரம சிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உட்பட பல முக்கிய பிரமுகர்களை நான் சந்தித்தேன். இலங்கையின் பொருளாதாரம் ,சமூக வளர்ச்சி, அபிவிருத்தி உட்பட மக்கள் நலன்களில் இவர்கள் கூடதலான அக்கரை கொண்டவர்களாக காணப்படுகினறார்கள். வட மாகாணம் ,வட மேல் மாகாணம் , அம்பாந்தோட்டை உட்பட நாhட்டில் முக்கிய பிறதேசங்களில் தொழில்துறை வளையங்கள் கைத்தொழில் பேட்டைகளை அமைக்க நாம் இலங்கைக்கு பூரண ஒத்தழைப்பினை வழங்குவோம் என்றார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இங்கு கருத்து தெரிவிக்கையில்: ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவின் உத்யோகபூர்வ சீன விஜயத்தின் போது சீனாவின் கொழும்புத் துறைமுக நகர் திட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படும். துறைமுக நகர்; நிருமாணப் பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் சீனா அதிருப்தியுடன் உள்ளது என்பது எங்களுக்குத் தெரியும் நல்லாட்சி, சட்டம், ஜனநாயகம் மற்றும் வெளிப்படைத்தன்மை என்பவற்றை நாட்டில் உறுதிப்படுத்துவதன் மூலம் முதலீடுகளுக்கு சிறந்ததொரு சாதகமான சூழலை ஏற்படுத்துவதற்கான செயற்றிட்டங்களை ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தலையிலான அரசாங்கம் முன்னெடுக்கும்.

உண்மையில் கொழும்புத் துறைமுக நகர் திட்டத்தினை நிறுத்த வேண்டும் என்ற ஆசை இந்த அரசாங்கத்துக்கு இல்லை,அதற்கு எதிராக அதிகமான முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாலும் சுற்றுச்சூழல் ஆய்வுகள் முறையாகப் பின்பற்றப்படாமையினால்தான் இவ்வாறு ஏற்பட்டதாகும். நான் வர்த்தக அமைச்சர் என்ற வகையில் ஐனாதிபதி, பிரதமர் மற்றும் சுற்றாடல் ஆர்வலர்களுடன் பேசி மிக விரைவில் சாதகமான பதிலைத்தருகின்றேன். அத்துடன் கடந்த ஜெனீவா மனித உரிமை வாக்கெடுப்பின்போது இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தமைக்கும் இலங்கை அரசாங்கம் சார்பாக சீனாவுக்கு விசேட நன்றியையும் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்ககொள்கிறேன்.

சீனா மிகப்பெரிய நாடாகும். அந்த நாட்டுடனான எமது உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்றார் அமைச்சர். சீனாவின் முதலீடுகளை லங்கை வரவேற்பதாகக் குறிப்பிட்டிருக்கு அவர், முதலீடுகளை மேற்கொள்வதற்கு பாதுகாப்பான இடம் இலங்கையென்றும் கூறியுள்ளார்.

இச்சந்திப்பில் ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.