செய்திகள்

கொழும்பு நகர மக்கள் ஒட்சிசன் பற்றாக்குறை பிரச்சனையை எதிர்க்கொள்ளும் அபாயம்

கொழும்பு நகரின் வாய்வு மண்டலத்தில் ஒட்சிசன் அளவு குறைவடைந்து வருவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

ஒட்சிசன் அளவு குறைவடைந்து வருகின்ற போதும், இன்னும் அதனை மக்கள் உணராமைக்கு அருகில் உள்ள கடல் ஊடாக ஒட்சிசன் விரைவில் கிடைப்பதனாலேயே எனவும் ஆனால் எதிர்காலத்தில் மக்கள் உணரக் கூடும் என்றும் கொழும்பு மாநகர அதிகாரிகளுக்கும், சுற்றாடல் அமைச்சு அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடலில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறான ஒட்சிசன் பற்றாக் குறை ஏற்பட்டுவதை தடுக்க நகரில் மரம் வளர்க்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அந்தக் கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் மரங்கள் இல்லாமை, கட்டிடங்கள் அதிகரித்தல், சனத்தொகை நெருக்கடி ஆகிய காரணங்களினாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனால் இதற்கு மரங்களை வளர்ப்பதன் மூலமே தீர்வு காண முடியுமென்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். -(3)