செய்திகள்

கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையில் 1,010 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை

நேற்று திங்கட்கிழமை பதிவாகிய 34 புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் கொழும்பு 12 இல் உள்ள பண்டாரநாயக்க மாவத்தையிலேயே அடையாளம் காணப்பட்டனர்.இந்நிலையில் அப்பகுதியில் உள்ள 242 குடும்பங்களைச் சேர்ந்த 1,010 பேர் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.அந்தவகையில் அவர்கள் இலங்கை இராணுவத்தால் கண்காணிக்கப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அப்பகுதியில் உள்ள 242 குடும்பங்களைச் சேர்ந்த 1,010 பேர் தனிமைப்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.(15)