செய்திகள்

கொழும்பு யாசகர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பு

ஊரடங்கு சட்டத்தால் கொழும்பில் பாதிக்கப்பட்டிருந்த யாசகர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குணசிங்கபுர பஸ் நிலையத்தில் யாசகர்கள் பலர் தங்கியிருந்த நிலையில் அவர்கள் சுகாதார அதிகாரிகளின் பரிசோதனைகளை தொடர்ந்து பொலிஸாரினால் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
360 பேர் வரையில் இவ்வாறாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு தேவையான உடைகள் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டு அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். -(3)