செய்திகள்

கொழும்பு வந்தடைந்தார் மோடி: இன்று முக்கிய பேச்சுவார்த்தைகள்

வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்டு இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி இன்று வெள்ளிக்­கி­ழமை காலை 5.20 க்கு இலங்கை வந்­துள்ள நிலையில், அவரை கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலை­மை­யி­லான குழு­வினர் வர­வேற்­றனர்.

இந்­திய பிர­த­மரின் வரு­கையை முன்­னிட்டு பாது­காப்பு ஏற்­பா­டுகள் பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­துடன் விசேட போக்­கு­வ­ரத்து ஒழுங்­கு­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இன்­று­காலை 5.20 மணிக்கு கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தை இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி தலை­மை­யி­லான குழு­வினர் வந்­த­டைந்­தனர்.
0
அத்­துடன் விமான நிலை­யத்தில் இந்­திய பிர­தமர் மோடிக்கு முப்­ப­டை­யி­னரின் அணி­வ­குப்பு மரி­யாதை அளிக்­கப்­பட்­ட­துடன் செங்­கம்­பள வர­வேற்பும் வழங்­கப்­பட்­டது. இலங்­கையின் மிக நெருங்­கிய அயல் நாடான இந்­தி­யாவின் பிர­தமர் ஒருவர் 28 வரு­டங்­க­ளுக்கு பின்னர் உத்­தி­யோ­க­பூர்வ அரச விஜ­யத்தை மேற்­கொண்டு இலங்கை வந்­துள்­ளமை வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த விட­ய­மாக கரு­தப்­ப­டு­கின்­றது.
4
இந்­திய பிர­த­மரின் இலங்கை விஜ­யத்­தின்­போது பல உடன்­ப­டிக்­கை­களும் இரண்டு நாடு­க­ளுக்கு இடையில் இன்­றைய தினம் கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ளன. பிர­தமர் நரேந்­திர மோடி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­திகள் சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் பிர­தி­நி­திகள் எதிர்க்­கட்சித் தலைவர் நிமால் சிறி­பால டி. சில்வா அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கட்­சியின் பிர­தி­நி­திகள் இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் கட்­சியின் தலை­வர்கள் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பி­ன­ரையும் சந்­தித்து பேச்சு நடத்­த­வுள்ளார்.

6