செய்திகள்

கொழும்பு வைத்தியசாலையில் துண்டிக்கப்பட்ட மாணவனின் கை வெற்றிகரமாக மீள பொருத்தப்பட்டது

விபத்தொன்றில் சிக்கி வலது கையின் முன் பாகம் துண்டாடப்பட்ட நிலையில் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 15 வயது மாணவன் ஒருவரின் கையை மருத்துவர்கள் வெற்றிகரமாக மீள பொருத்தியுள்ளனர்.

சுமார் 7 மணி நேரம் சத்திரசிகிற்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் டு பிளாஸ்டிக் சத்திரசிகிற்சை வெற்றிகரமாக நடைபெற்றதாகவும் தற்போது மாணவன் தேறிவருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒஸ்கட மதுஷாங்க என்ற இந்த மாணவன் கம்பகா மாவட்டத்தின் வலுவத்த என்ற இடத்தில் பஸ் ஒன்றில் பயணம் செய்தபோது அந்த பஸ் மற்றொரு பஸ்ஸை முந்திச் செல்ல முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.