செய்திகள்

கொவிட்-19 வைரஸ் தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு 2000 ரூபா கொடுப்பனவு

கொவிட்-19 வைரஸ் தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்த குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 2000 ரூபா உதவித் தொகை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.இதேவேளை பயனாளிகளின் பட்டியலைத் தொகுக்குமாறு மாவட்ட செயலாளர் களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் நிதியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை முதல் உதவித்தொகை வழங்கப்படும் என நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்தார்.அதன்படி, பிற கொடுப்பனவுகளைப் பெறாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் உதவித்தொகையைப் பெற தகுதியுடைய வர்களாக இருப்பார்கள்.(15)