செய்திகள்

கோதபாயவுடன் இன்னமும் சில பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர்

வட மாகாணத்தில் குழப்பத்ததையும் பதற்ற நிலையையும் தோற்றுவித்து விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்ற தோற்றத்தை உருவாக்குவதற்கு ஒரு பிரிகேடியர் மற்றும் ஒரு கேணல் தலைமையில் பயிற்சி வழங்கப்பட்டமை குறித்து விசாரணை செய்ய அமைச்சரவை முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன இன்னமும் புலனாய்வு பிரிவின் சில அதிகாரிகள் கோதபாய ராஜபக்ஸவுடன் தொடர்புகளை பேணி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்ற வெளிநாட்டு செய்தியாளர்களுடனான சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் குறிப்பிட்ட பிரிகேடியரே வெள்ளை வான் கடத்தல்களுக்கு பொறுப்பாக இருந்தவர் என்றும் கேணல் தர அதிகாரியே கோதபாய ராஜபக்ஸவின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்தவர் என்றும் கூறினார்.