செய்திகள்

கோதபாய ராஜபக்ஸ இயக்கியதாக கூறப்படும் மரண படை பற்றிய விசாரணை ஆரம்பம்: பொலிஸ் பேச்சாளர்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஸ மரணப் படை ஒன்றை இயக்கி வந்ததாகவும் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை கொலை செய்வதற்கு அவர் உத்தரவிட்டதாகவும் தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகன, இந்த விடயங்கள் பற்றி விசாரணைகள் ஆரம்பமாகி இருப்பதாகவும் கூறியுள்ளார்.

“கோதபாய ராஜபக்ஸ கடத்தல், தாக்குதல் மற்றும் கொலைகளுக்கு காரணமாக இருந்துள்ளார். மூன்று கொலைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று லசந்த விக்ரமதுங்கவினுடையது. ஒரு மரண படையை அவர் இயக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது” என்று எ.எவ். பி செய்திச் சேவைக்கு அவர் தெரிவித்துள்ளார்.