செய்திகள்

கோதாபயவுக்கு எதிராக இரகசிய ஆயுத விற்பனை தொடர்பாக முறைப்பாடு

அவன் கார்ட் மற்றும் ரக்னா லங்கா நிறுவனங்கள் இரகசிய ஆயுத விற்பனையில் ஈடுபட்டதாக அவன் கார்ட் நிறுவனத்தின் முகாமையாளர்களில் ஒருவரான கப்டன் உதயதிஸாநாயக்க புலனாய்வுப் பிரிவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

வெளிநாடுகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்துள்ளதாக குற்றஞ் சுமத்தியுள்ளார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ மற்றும் அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி ஆகியோருக்கு எதிராக இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவன்கார்ட் நிறுவன மோசடிகள் குறித்து கடந்த காலங்களில் தகவல்களை வழங்கியதனால் நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட சில அதிகாரிகள் தமக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு ஆயுத சட்டங்களையும் சர்வதேச கடல் சட்டங்களையும் மீறி ஆயுத விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. போரின் பின்னர் படையினரிடமிருந்து ஆயுதங்கள் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட ஆயதங்கள் குத்தகை அடிப்படையிலும் வழங்கப்பட்டுள்ளதுடன் பல ஆயுதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மொரீசியஸ், சீசெல்ஸ், மாலைதீவு, தன்சானியா, பென்ரா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் ஆயுதங்களும் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்ததாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.