செய்திகள்

கோதபாயவும் மனைவியும் மாலைதீவில்? இராணுவ விமானத்தில் சென்றனர்

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வியாழன்று இரவு வெளிவரத் தொடங்கியவுடன் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவும் மனைவி அயோமாவும் விமானப்படை விமானமொன்றின் மூலம் மாலைதீவுக்குச் சென்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூர் செல்வதற்கு விசா தேவையில்லை என்றாலும் இராணுவ விமானத்தை அனுமதிப்பதற்கு அந்த நாடு மறுத்ததாகவும் அதையடுத்தே இவர்கள் மாலைதீவுக்குச் சென்றதாகவும் ராஜபக்ஷ புத்திரர்கள் சீனாவுக்குச் சென்றதாகவும் ஆங்கில இணையச் செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.