செய்திகள்

கோதாபயவை அரசியலுக்கு போக வேண்டாம் என்கிறார் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவுக்கு அரசியல் பொறுத்தமில்லையெனவும் இதனால் அவர் அரசியலுக்கு  செல்லாதிருப்பதே சிறந்தது எனவும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்  கலகம ஶ்ரீ அத்ததஸ்சி தேரர் தெரிவித்துள்ளார்.
நேற்று மகாநாயக்க தேதரை கோதாபய ராஜபக்‌ஷ சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை அந்த சந்திப்பின் பின்னர் தேசிய பட்டியலில் பாராளுமனன்றத்துக்கு வரவுள்ளதாகஇந்திய ஊடகத்தில் வெளியான செய்தி தொடர்பாக அவரிடம் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த கோதாபய தெரிவிக்கையில். அப்படி நான் அரசியலுக்கு வர போவதுமில்லை. இந்திய ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டதை போன்று பாராளுமன்றத்துக்கு போக போவதுமில்லை. என தெரிவித்துள்ளார்.