செய்திகள்

கோதாபய இன்று இலஞ்ச ஊழல் ஆணைகுழுவில்! 20ம் திகதியே நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு செல்வார்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ விசாரணைக்காக இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை அங்கு சென்றுள்ள அவரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவுக்கும் இன்றைய தினம் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும் அதற்கென வேறு தினமொன்றை அவர் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது.

இதன்படி அவர் எதிர்வரும் 20ம் திகதி பொலிஸ் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.