செய்திகள்

கோதாபய ராஜபக்ஷவுக்கு எதிரான இலஞ்ச ஊழல் விசாரணைக்கு எதிராக பேராட்டம் நடத்த திட்டம்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் எதிர் வரும் 24ம் திகதி விசாரணைக்காக ஆஜராகுமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு ஆதரவான தரப்பொன்று போராட்டங்களை முன்னனெடுக்க தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி நாளைய தினம் காலை கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு முன்னால் ஆர்ப்பாட்மொன்றை முன்னெடுப்பதற்கு அந்த குழு திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் பாராளுமன்றத்தில் எதிரணி எம்.பிக்கள் முன்னெடுத்த போராட்டம் காராணமாக அவரை ஆணைக்குழுவுக்கு அழைக்காது அவரிடம் சென்று விசாரணை நடத்த ஆணைக்குழு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.