செய்திகள்

கோதாபய ராஜபக்ஷ தேசிய பட்டியலில் பாராளுமன்றம் வர முயற்சி?

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்குள் பிரவேசிக்க முயற்சிப்பதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் பொதுத்தேர்தலின் பின்னர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி அமைக்கப்படுகின்றபோது அமைச்சராக கோத்தாபய பாராளுமன்றத்துக்குள் நுழையலாம் என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தனது சகோதரரான மஹிந்த ராஜபக்ஷவை தேர்தலில் வெற்றியடையச் செய்யும் நோக்கில் இவர் அரசியலிலிருந்து விலகியிருப்பதாக காண்பித்துக் கொள்ள முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் பாதுக்க பிரதேச விஹாரை ஒன்றில் ஊடகவியலாளர்களை சந்தித்த போது தாம்இ அரசியலில் பிரவேசிக்கப் போவதில்லை என கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தமை குறித்தும் அந்த இந்திய ஊடகச் செய்தியில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.