செய்திகள்

கோதாபய விவகாரம் உயர் நீதிமன்ற தடையுத்தரவில் பிரதமருக்கு குழப்பம் : சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற திட்டம்

கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய இடைக்கால தடை விதித்துஇ உயர் நீதிமன்றத்தின் நீதியரசர்கள் குழாம் வழங்கிய உத்தரவு தொடர்பில் குழப்பங்கள் இருப்பதாகவும் இது தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும்  பிரதமர் ரணில்விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று அலரிமாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இதனை தெரவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 132ம் உறுப்புறுமையின் பிரகாரம் உயர்நிதிமன்றத்தில் யாரேனும் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தால் அதனை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பது தொடர்பாக  இரரண்டு பேருக்கும் குறையாத நீதியரசர்களினால் அது அறிவிக்கப்படவேண்டும் அதேபோன்று தடையுத்தரவு விதிக்கும் போது 3பேர் அடஙகிய நீதியரசர்கள் குழாம் இருக்க வேண்டும் அனால் 2பேரே அதன்போது இருந்துள்ளனர் . இந்த விடயம் தொடர்பாக எனது சட்டத்தரனிகள் எனக்கு தெளிவுபடுத்தியுள்ளனர்.
இந்நிலையில் இதில் சட்ட சிக்கல் காணப்படுகிறது.
எனவே இது குறித்து தாம் சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெறவிருப்பதாக பிரதமர் ரணில்விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.