செய்திகள்

கோதாபாயவின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு

காலி துறைமுகத்தில் மிதந்த நிலையில் மீட்கப்பட்ட ஆயுதக் கப்பல் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகளை விசாரணை செய்ய காலி நீதிவான் நீதிமன்றம் இரகசிய பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்துடன் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் டீ.எம்.எஸ். ஜயரத்ன மற்றும் அவன்காட் மெரிடைஸ்ம் நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் அனைவரது வங்கிக் கணக்குகளையும் ஆய்வுக்குபட்படுத்த நீதிமன்றம் பணித்துள்ளது.

இந்த விசாரணை முடிவடைந்தவுடன் இது குறித்த அறிக்கை ஒன்றையும் சமர்ப்பிக்குமாறு காலி நீதிமன்ற நீதிவான் நிலூபுலி லங்காபுர இன்று காலை உத்தரவிட்டுள்ளார்.

அவன்காட் விவகாரம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஜயரத்னவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டும் என்றதால் அவரது வெளிநாட்டுப் பயணங்களுக்கும் இன்றைய தினம் தடை விதிக்கப்பட்டுள்ளது.