செய்திகள்

கோதாபாய வைத்திருந்த சரித்தா, சாரிகாவை ஒப்படைத்தார்

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோதாபாய ராஜபக்ச, தான் சட்டரீதியாக வைத்திருந்து வளர்த்து வந்த சரித்த மற்றும் சாரிகா என்ற 2 யானைக் குட்டிகளையும் மீள ஒப்படைத்துள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த 2 யானைக்குட்டிகளும் பின்னவல சரணாலயத்திற்கே ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதில் ஒரு யானை குட்டி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் கோதாபாய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டது.

இவ்விரண்டு யானைக்குட்டிகளையும் தம்மால் பராமரிக்க முடியாது என்ற காரணத்தினால் கோதாபாய ஒப்படைத்ததாக பிரதி அமைச்சர் வசந்த சேனாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.