செய்திகள்

கோதாவின் பிரஜாவுரிமை பறிபோகும் என்கிறார் மங்கள

மிக் கொடுக்கல் வாங்கல் குறித்து முறையான விசாரணை நடத்தி  சட்டத்தை செயற்படுத்தினால் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாயவிற்கு பிரஜாவுரிமை பறிபோகும் அபாயம் உள்ளதென வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர எச்சரித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே மங்கள சமரவீர இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்

கோதாபய ராஜபக்ச யுத்தம் ஆரம்பித்ததே தரகுப் பணம் பெற்றுக்கொண்டுதான். நான் வெளியிடும் கருத்து பொய் என்றால் எனக்கு எதிராக வழங்குத்தாக்கல் செய்யலாம்.

2006ஆம் ஆண்டு 4 மிக் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. அவை அதிக விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. யுத்த காலம் என்பதால் அது கணக்கிலெடுக்கப்படவில்லை.

இந்தக் கொக்டுக்கல் வாங்கலுக்கு இணைப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் லண்டன் அலுவலகம் என்று ஒன்று இல்லை.

இந்தக் கொடுக்கல் வாங்கலுடன் உக்ரேன் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவிற்கு தொடர்புள்ளது. அவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்