செய்திகள்

கோதாவுக்கு விசுவாசமான ஊடகவியாளருக்கு விளக்கமறியல்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் நெருக்கமாக செயற்பட்ட ஊடகவியலார் சுதர்மன் ரதலியகொடவினை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் சுயாதீன தொலைக்காட்சி சேவையின் (ITN) செய்தி ஆசிரியராக கடமையாற்றிய இவர், கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டார்.

இவருக்கு எதிராக பல தடவைகள் நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜராகினார்.

இதன்போது போலியான செய்திகளை ஒலிபரப்பினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இவரை, பெப்ரவரி 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

0