செய்திகள்

கோதாவை ஶ்ரீ.ல.சு.கவுக்குள் அனுப்ப மஹிந்த தீவிர முயற்சி

தனது சகோதரனான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவை அரசியலுக்குள் கொண்டு வருவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தனது ஆதரவு தரப்பினருடன் ஆலாசனைகளை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் அவருக்கு முக்கிய பதவியொன்றை வழங்க வைப்பதற்காக தனது ஆதரவு தரப்பினருடாக மஹிந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது ஆதரவு தரப்பினரை கோதாபயவுக்கு கட்சிக்குள் முக்கிய பதவியை வழங்குமாறு கோரிக்கைகளை முன்வைக்கச் செய்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் கட்சியின் தலைமைப் பீடம் இது தொடர்பாக எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
n10