செய்திகள்

கோத்தபாய நிதி மோசடி விசாரணை பிரிவில்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தற்போது கொழும்பிலுள்ள நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதன்படி இன்றுகாலை அங்கு அவர் சென்றுள்ள நிலையில் அவரிடம் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2006 இல் இடம்பெற்ற மிக் விமான கொள்வனவு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக விசாரணை நடத்தவே அவர் அங்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.