செய்திகள்

கோத்தாபய ராஜபக்ஷ குற்றவியல் திணைக்களத்திற்கு விசாரனைக்காக அழைக்கப்படுவார்

‘எவன்கார்ட்’ மிதக்கும் ஆயுத களஞ்சிய விடயம் தொடர்பாக விசாரிப்பதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை குற்றவியில் விசாரனை திணைக்களத்திற்கு அழைப்பதற்கு திட்டமிடபட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் அவருக்கு அந்த திணைக்களத்தினால் இதற்கான அழைப்பு விடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனியார் பாதுகாப்பு நிறுவனமொன்றுக்கு இராணுவத்திற்கு சொந்தமான ஆயுதங்கள் வழங்கப்பட்டதாக அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக  இதற்கு முன்னர் அவரின் வீட்டுக்கு சென்று குற்றவியல் விசாரனை பிரிவினர் விசாரனைகளை நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.