செய்திகள்

கோத்தாவுக்கு எதிராக மற்றுமொரு முறைப்பாடு

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை அணைக்குழுவில் மற்றுமொரு முறைப்பாடொன்றை ஜே.வி.பி மேற்கொண்டுள்ளது.

அம்பாறையில் கடந்த 2013இல் நடைபெற்ற தேசத்துக்கு மகுடம் (தயட கிருள) கண்காட்சி காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்களின் போது மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் இதனுடன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது .

ஜே.பி.வியின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த பியதிஸ்ஸவினால் இன்று காலை இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.