செய்திகள்

கோத்தா தொடர்பான ஆவணங்களை புலனாய்வு திணைக்களத்தில் ஒப்படைக்க நீதிமன்று உத்தரவு

“எவன் கார்ட்” ஆயுதக் கப்பல் சம்பவத்துடன் தொடர் புடைய சகல ஆவணங்க ளையும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்குமாறு காலி பிரதான நீதவான் நிலுபுலி லங்காபுத்ரா உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் கையொப்பத்தடன் கூடிய ஆவணங்கள் மற்றும் மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய 2010 முதல் 2013 ஆம் ஆண்டு வரையிலான சகல ஆவணங் களையும் ஒப்படைக்குமாறும் உத்தரவி டப்பட்டுள்ளது.

காலி துறைமுகத்திலுள்ள எவன்கார்ட் ஆயுதக் கப்பல் தொடர்பான வழக்கு நேற்று  காலி பிரதான மஜிஸ்ட்ரேட் நிலுபுலி லங்காபுத்ரா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மேற்படி ஆயுதக் கப்பல் தொடர்பாக நடத்தப்பட்ட விசார ணைகளின் போது ஊழல் ஒழிப்பு சட்டத்தின் கீழுள்ள குற்றச் செயல்கள் பல வெளிவந்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

எவன்கார்ட் வழக்கு விடயத்தில் தம்மிடமுள்ள ஆவணங்களை அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்ப வேண்டியுள்ளதால் அதற்கான உத்தரவையும் பெற்றுக் கொடுக்குமாறு இரகசியப் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இந்தக் கப்பலிலுள்ளவற்றை வேறு கப்பல்களுக்கு ஏற்றுவதற்காக அதன் உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ள போதும் சட்ட மா அதிபர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் அதற்கு இடமளிக்க முடியாதென்றும் பிரதான நீதவான் நேற்று தெரிவித்தார்.

எவன்கார்ட் கப்பலில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு விடுமுறை பெற்றுக் கொடுக்க வேண்டுமென்று விண்ணப் பித்திருந்த போதும் குற்றப் புலனாய்வு திணைக்களம் அதற்கு எதிர்ப்பு தெரிவித் துள்ளதுடன் மனிதாபிமான அடிப்படையில் இதனை ஆராய்ந்து சட்ட மா அதிபரின் பரிந்துரைக்கமைய நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் காலி நீதவான் தெரிவித்துள்ளார்.

விசாரணை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.