செய்திகள்

கோப்பாயில் நடைபெற்ற விசேட தேவையுடைய மாணவருக்கான விளையாட்டுப் பயிற்சி முகாம்

யாழ்.கல்வி வலயத்திற்குட்பட்ட விசேட தேவையுடைய மாணவர்களுக்கான விளையாட்டுப் பயிற்சி முகாம் கடந்த செவ்வாய்க்கிழமை கோப்பாய் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.

விசேட தேவையுடைய மாணவர்களுக்கான வலய மட்டப் போட்டிகள் யூன்-6 ஆம் திகதி கோப்பாய் மகாவித்தியாலயத்தில் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கு முன்னோடியாகவே இந்தப் பயிற்சி முகாம் நடாத்தப்பட்டதாக யாழ்.கல்வி வலய விசேட கல்விப் பிரிவு ஆசிரிய ஆலோசகர் செல்வி ந.சந்திரிக்கா தெரிவித்தார். யாழ்.நகர் நிருபர்-

IMG_3587