செய்திகள்

கோமரசன்குளம் மகாவித்தியாலயத்தில் இல்ல விளையாட்டுப் போட்டி: வடக்கு முதல்வர் கலந்துகொண்டார்

வவுனியா கோமரசன்குளம் மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் பாடசாலை மைதானத்தில் இன்று நடைபெற்றது.

பாடசாலை அதிபர் எஸ். பூலோகராசா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வுகளில் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் பிரதம அதிதியாகவும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வட மாகாணசபை சுகாதார அமைச்சர், கல்வி அமைச்சர் உட்பட மாகாணசபை உறுப்பினர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தனர்.

பண்டாரவன்னியன், சங்கிலியன், எல்லாளன் ஆகிய இல்லங்கைள சேர்ந்த மாணவர்களுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் எல்லாளன் இல்லம் முதலாமிடத்தினை பெற்றிருந்தது.

DSC08285 DSC08303 DSC08305