செய்திகள்

கோயம்பேடு சிறையிலிருந்து இலங்கையர் தப்பியோட்டம்

சென்னை கோயம்பேடு சிறையிலிருந்து காவலாளியைத் தாக்கிவிட்டு இலங்கையர் ஒருவர் தப்பிச்சென்றுள்ளார். போதைவஸ்து கடத்தல் தொடர்பில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இவர் புழல் சிறைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே தப்பிச்சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

32 வயதான கொழும்பைச் சேர்ந்த சுரேஷ் என்றழைக்கப்படும் நிசாந்த் என்பவரே வெள்ளிக்கிழமை அதிகாலை 12 மணியளவில் இவ்வாறு தப்பிச்சென்றுள்ளார். சிறுநீர் கழிக்கப்போவதாகக் கூறி அனுமதி கிடைத்த நிலையில் தமக்கு பாதுகாப்பாக வந்த காவலாளியை தாக்கிவிட்டு அவர் பஸ் ஒன்றில் ஏறித் தப்பிச் சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் 2014 ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.