செய்திகள்

கோவணத்துடன் பொன்சேகாவிடமிருந்து நியமனம் பெற்ற உறுப்பினர்

ஜனநாயக கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்களுக்கான நியமனங்கள் இன்று அந்த கட்சியின் தலைவர் முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தலைமையில் கொழும்பில் நடைபெற்ற போது  அங்கு ஒருவர் கோவணத்துடன் சென்று தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
கண்டி மத்தி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கோவணத்துடன் அங்கு சென்றுள்ளார்.
இவர் கடந்தக் காலங்களில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆர்பாட்டங்களின் போது கோவனத்துடனேயே கலந்துக்கொள்வார். அதேபோன்றே இன்று கோவணத்துடன் சென்று ஜனநாயக கட்சியின் தொகுதி அமைப்பாளராக நியமம் பெற்றுள்ளார்.
20150701_141618