செய்திகள்

கோஷம் தொடர்பான சர்ச்சை அர்த்தமற்றது: அத்வானி

‘பாரத மாதா கி ஜே’ கோஷம் தொடர்பான சர்ச்சை அர்த்தமற்றது என பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.

வளரும் தலைமுறையினரிடம் இந்தியா பற்றிய பெருமையை எடுத்துக்கூறும் வகையில், ‘பாரத் மாதா கி ஜே’ என அனைவரும் சொல்லிக்கொடுக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் கூறியிருந்தார்.

இதற்கு போட்டியாக, ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி தலைவர் அசாதுதீன் ஒவாய்சி ‘நான் பாரத் மாதா கி ஜே’ எனக்கூற மாட்டேன். எனது கழுத்தில் கத்தியை வைத்து சொல்லச்சொன்னாலும், நான் அவ்வாறு கூற மாட்டேன். ‘பாரத் மாதா கி ஜே’ என கூற வேண்டும் என்று அரசியல் சாசனத்தில் கூறப்படவில்லை.

என அவர் கூறியிருந்தார். இதையடுத்து, மகா., சட்டசபையில் இருந்து ‘பாரத மாதா கி ஜே’ கோஷத்தை எழுப்பாத காரணத்துக்காக ஒவாய்சி கட்சியின் எம்.எல்.ஏ., சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ம.பி., சட்டசபையில், ஒவாய்சிக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

இந்நிலையில் குஜராத் மாநிலம், ஆமதாபாதில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி தெரிவிக்கையில், ‘பாரத மாதா கி ஜே’ கோஷம் தொடர்பாக நான் கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. அதுவொரு, அர்த்தமில்லாத சர்ச்சை எனத் தெரிவித்துள்ளார்.

 

N5