செய்திகள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு தனது விசாரணை முடிவுகளைவெளியிடுவதை தாமதிக்ககூடாது,

இலங்கை தமிழர்களை இனச்சுத்திகரிப்பிலிருந்து பாதுகாப்பதற்கு சர்வதேச சமூகம் கடந்த காலங்களில் தவறிவிட்டதை சுட்டிக்காட்டியுள்ள பிரிட்டிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் புதிய அரசாங்கத்தை தமிழர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புதன்கிழமை இலங்கையில் தமிழர்கள் குறித்து பொதுச்சபையில் இடம்பெற்ற விவாதத்தின்போதே இந்த கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் தொடர்பான தங்களது கொள்கைகள் மாறாது தமிழர் பகுதிகளிலிருந்து இராணுவம் விலக்கப்படமாட்டாது என புதிய அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறித்து நான் ஆழ்ந்த கவலையடைந்திருக்கிறேன்,எனதமிழர்களுக்கான அனைத்து கட்சி குழுவின் தலைவர் லீ ஸ்கொட் குறிப்பிட்டுள்ளார்
புதிய அரசாங்கத்தில் இடமபெற்றுள்ளவர்கள் குறித்து தனது கவலையை வெளியிட்ட அவர் இலங்கையின் புதிய ஜனாதிபதியும் முன்யை அரசாங்கத்தின் உறுப்பினரே என குறிப்பிட்டார்.இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை தடுப்பது போன்ற நடவடிக்கைகள் மூலமாக அழுத்தம் கொடுக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டார்.தமிழர்களின் உரிமைகளை ஏற்றுக்கொள்ளும், சுயநிர்ணய உரிமையை அடிப்படையா கொண்ட தீர்வின் மூலம் மாத்திரமே நிரந்தீர்வு சாத்தியம் என அவர் குறிப்பிட்டார்.
பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் தனது இலங்கை விஜயத்தின் போது இலங்கையின் புதிய அரசாங்கத்தை சர்வதே குற்றவியல் நீதிமன்றத்தினை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்க வேண்டும்,ஐ.நா மதிக்குமாறு கேட்க வேண்டும்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு தனது விசாரணைகளை வெளியிடுவதை தாமதிக்ககூடாது, உரிய திகதியில் வெளியிடவேண்டும் இலங்கை அரசாங்கம் அவ்வாறு வேண்டுகோள் விடுக்கலாம், ஆனால் அவர்கள் ஐ.நாவுடன் ஒத்துழைக்காவிட்டால் அதனை ஏற்றுக்கொள்வதில் அர்த்தமில்லை என அவர் குறிபிப்பிட்டுள்ளார்.