செய்திகள்

சகல உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் ஒரே நேரத்திலேயே நடக்கும் : கருஜயசூரிய

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை பகுதி பகுதியாக நடத்தாது நாடு பூராக சகல உள்ளுராட்சி சபைகளும் உள்ளடங்கும் வகையில் ஒரே நேரத்திலேயே தேர்தல் நடத்தப்படுமென பொது நிருவாக மற்றும் உள்ளுராட்சி சபைகள் அமைச்சர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இனி வரும் காலத்தில் பகுதி பகுதியாக உள்ளுராட்சி சபைகளுக்கான தேதர்தலை நடத்தாது ஒரே நேரத்திலேயே சகல உள்ளுராட்சி சபைகளுக்குமான தேர்தல் நடத்தப்படும். இதேவேளை உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள் மற்றும் உறுபபினர்களுக்கு தேதவையான வளங்கள் மற்றும் அதிகாரஙகள் வழங்கப்படும்  அதனூடாக மக்களுக்கு அவர்கள் உரிய சேவைகளை வழங்க வேண்டும்.என அவர் தெரிவித்துள்ளார்.