செய்திகள்

சகாக்களை விடுவிக்குமாறு விடுதலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் கோரிக்கை

எகிப்தில் சிறையிலடைக்கப்பட்டிருந்த பின்னர் விடுதலைசெய்யப்பட்டுள்ள அல்ஜசீரா ஊடகவியலாளர் பீட்டர் கிரெஸ்டே தான்விடுதலையானது குறித்து நிம்மதி வெளியிட்டுள்ளஅதேவேளை தனது சகாக்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து சீற்றத்தை வெளியிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியரான பீட்டர்கிரெஸ்டே ஞாயிற்றுக்கிழமை விடுதலைசெய்யப்பட்டு தற்போது எகிப்திலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளார்.
தனது விடுதலையை எகிப்திய அதிகாரிகளின் பாரிய முன்னேற்றகரமான நடவடிக்கை என வர்ணித்துள்ள அவர் ஏனைய இருவரினது விடயத்திலும் எகிப்து இந்த பாதையை பின்பற்றும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.கிரஸ்டேயுடன் 2013 இல் கைதுசெய்யப்பட்ட ஏனைய இரு ஊடகவியலாளர்களும் தொடர்ந்தும்தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.