செய்திகள்

சகோதரனை பார்க்க கோதா சிறைச்சாலை சென்றார்

கைது செய்யப்;பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவை பார்வையிடுவதற்காக அவரின் சகோதரரான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபாய ராஜபக்ஷ சற்று நேரத்துக்கு முன்னர் வெலிக்கடையிலுள்ள சிறைச்சாலை வைத்திய சாலைக்கு சென்றுள்ளார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர் அங்கிருந்து வெளியேறி நேராக பஸிலை பார்வையிடுவதற்காக அங்கு சென்றுள்ளார். அவருடன் முன்ளாள் அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் டலஸ் அழகப்பெறும உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் சென்றுள்ளனர்.