செய்திகள்

சக்திமிக்க தேசிய அரசாங்கத்தை பொதுத் தேர்தலின் பின் உருவாக்குவோம்: ரணில் அறிவிப்பு

நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலுக்கு பின்னர் சக்தி மிக்க தேசிய அர­சாங்­கத்தை கட்­டி­யெ­ழுப்­புவோம் என தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நல்­லாட்­சிக்­கான எமது அர­சியல் பய­ணத்தில் இணைந்து கொள்ள விரும்பும் அனைத்து கட்­சி­க­ளுக்கும் அழைப்பு விடுப்­ப­தா­கவும் தெரி வித்தார்.

பொது தேர்தலை முன்­னிட்டு ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு புதிய உறுப்­பி­னர்­களை இணைத்து கொள்ளும் ஆரம்­பக்­கட்ட நிகழ்வு நேற்று கொழும்பில் அமைந்­துள்ள தொட்­ட­லங்க தொடர் மாடி குடி­யி­ருப்பு பகு­தியில் நடை­பெற்­றது இதில் கலந்து கொண்டு உறை­யாற்­று­கை­யி­லேயே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இதனைத் தெரிவித்தார். இதன் போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தொடர்ந்து கருத்து தெரிவிக்­கையில் கூறியதாவது:

“கடந்த ஜனா­தி­பதி தோ்தல் பிரச்­சார நட­வ­டிக்­கை­களின் போது அடுத்த பொது தோ்தலின் போது மக்­களின் விருப்­பத்­திற்கு அமைய எம்­மு­டைய அரசே ஆட்­சியில் அமர்ந்­தி­ருக்கும் என நாம் கூறினோம் இதனை எந்த ஒரு தரப்­பி­னரும் நம்­ப­வில்லை இவ்­வா­றன நிலையில் பல்­வேறு தியா­கங்­களின் மத்­தியில் சர்­வா­தி­கா­ர­மிக்க ஒரு குடும்ப ஆட்­சிக்கு முற்­றுப்­புள்ளி வைத்து நாட்டில் நல்­லாட்­சிக்கு வித்­திட்டோம்.

இவ்­வா­றான நிலையில் எமது நல்­லாட்­சியின் கீழ் மக்­க­ளுக்கு அளிக்­கப்­பட்ட வாக்­கு­று­தியின் அடி­ப­டையில் எதிர்­வரும் மாதம் பொது தோ்தல் ஒன்­றுக்கு செல்ல உள்ளோம் எனவே பொது தோ்தலுக்கு பின்­ன­ரான எமது நல்­லாட்­சிக்கும் நாட்டின் எதிர் கால ஸ்திர­மான பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்­கு­மான சக்தி மிக்க தேசிய அர­சாங்­கத்தை உரு­வாக்­கு­வ­தோடு ஐக்­கிய தேசி்யக் கட்­சியின் சார்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை பிர­தி­நி­து­வப்­ப­டுத்தும் அங்­கத்­த­வர்­களின் எண்­ணிக்­கை­யையும் அதி­க­ரிப்போம்.

எமது நல்­லாட்­சியின் கீழ் அடுத்த கட்ட செயற்­பாட்­டிற்கு அனைத்து கட்­சிகள் உட்­பட எமது மக்­களும் உத­வு­வார்கள் என்­பதில் எமக்கு எவ்­வித அச்­சமோ சந்­தே­கமோ இல்லை அனைத்து கட்­சி­களும் இந்த சந்­தர்ப்­பத்தில் நாம் அழைப்பு விடு­கின்றோம் வரு­ப­வர்­களை இணைந்து கொள்­வ­தற்கு நாம் எல்லா சந்­தர்ப்­பங்­க­ளிலும் தயா­ரா­கவே இருக்­கின்றோம்.

இன்று எமது நாடா­னது நல்­லாட்­சியின் கீழ் மூவின மக்­களும் எந்த ஒரு பிரச்­சி­னை­களும் அன்றி வாழ்வதோடு பல்வேறு நாட்டின் தலைவர்கள் எமது நாட்டை நோக்கி பயணிக்கின்றனர் இந்த சந்தர்ப்பத்தை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் சர்வேத நாடுகளும் எமது நல்லாட்சியின் சில செயற்பாடுகளுக்கு பாராட்டுகளை தொிவிக்கின்றனர் எனவே நாம் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எமது நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்”  எனவும் ரணில் தெரிவித்தார்.