செய்திகள்

சசீந்திர ராஜபக்ஷவிடம் விசாரணை

ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சசீந்திர ராஜபக்சவிடம், நிதிக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறப்பு காவல்துறைக் குழுவினர் இன்று விசாரணை நடத்தியுள்ளனர்.

முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் வெளிவிவகார அமைச்சின் அதிநவீன சொகுசு பேருந்துகளைப் பயன்படுத்தியமை தொடர்பாகவே இன்று அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

வெளிவிவகார அமைச்சினால் இறக்குமதி செய்யப்பட்ட நவீன வசதிகளைக் கொண்ட சொகுசுப் பேருந்துகளில் ஒன்று சசீந்திர ராஜபக்சவின் பயன்பாட்டில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சரான சசீந்திர ராஜபக்ச, தற்போதைய சபாநாயகர் சமல் ராஜபக்சவின் மகன் என்பதும், மகிந்த ராஜபக்சவின் பெறாமகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.