செய்திகள்

சஜித்தின் செயலாளர் இல்லத்தின் மீது துப்பாக்கிச் சூடு: வாகனமும் சேதம்

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாசவின் செயலாளரின் வீட்டின் மீதும் அவரது வாகனத்தின் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் சொந்த இடமான பெலியத்தை பிரதேசத்தின் சஜித்தின் அமைப்பாளரின் வாகனத்தின் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.

சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட சஜித் பிரேமதாச அரசாங்கத்தின் ஆதரவாளர்களாலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்திருக்கின்றார்.