செய்திகள்

சஜித் கட்சி மாறியதாக அரச தொலைக்காட்சி புரளி: தேர்தல் ஆணையாளர் எச்சரிக்கை

ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச கட்சி மாறியதாக அரச தொலைக்காட்சியில் இன்று காலை முதல் பிரச்சாரம் செய்யப்பட்டதையடுத்து தேர்தல் ஆணையாளர் அதனை நிறுத்துமாறு தொலைக்காட்சி நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

“ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கு நான் ஆதரவளிப்பதாகச் சொல்லப்படுவதில் எந்தவிதமான உண்மையும் இல்லை. பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவைத்தான் நான் ஆதரிக்கிறேன்” என இது தொடர்பில் சஜித் தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பில் அரச தொலைக்காட்சியில் இன்று ஒளிபரப்பான செய்தியையடுத்து அது குறித்து தேர்தல் ஆணையாளருக்கு சஜித் தெரியப்படுத்தியிருந்தார். இதனையடுத்தே தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்ட தொலைக்காட்சி நிறுவனத்தை எச்சரித்துள்ளார்.